முறையாக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்; அந்தியூர் அருகே பரபரப்பு
April 18, 2022
0
முறையாக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்; அந்தியூர் அருகே பரபரப்பு.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள கெட்டிசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட பழையராசாங்குளம் பகுதியில் கடந்த சில தினங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொது மக்கள் காலி குடங்களுடன் அந்தியூர்-வெள்ளித்திருப்பூர்பிரதான சாலையில் ராசாங்குளம் பிரிவு என்ற இடத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அந்தியூர் போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மாறன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, பொதுமக்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உடனடியாக குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இதனையடுத்து அரை மணி நேரத்திற்கு பிறகு சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து
Tags