Type Here to Get Search Results !

ஈரோடு மாவட்ட அமெச்சூர் கபாடி அசோசியேசன் சார்பில் ஆண்கள் மற்றும் பெண்கள் சாம்பியன்ஷிப் கபாடி போட்டி

ஈரோடு மாவட்ட அமெச்சூர் கபாடி அசோசியேசன் சார்பில் ஈரோடு மாவட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் சாம்பியன்ஷிப் கபாடி போட்டி நடைபெறுகிறது.
ஈரோடு வ.உ.சி பார்க் ஸ்டேடியத்தில் (30.04.2022 - 01.05.2022) இரண்டு நாள் நடைபெறவிருக்கும் இந்த கபாடி சேம்பியன்ஷிப் போட்டியானது மாவட்ட விளையாட்டு அலுவலர் R . சதீஷ்குமார் தலைமையில் 30-04-2022 இன்று தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபாடி கழகத்தின் மேற்பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது.
இதில் வெற்றி பெறும் அணிக்கு ஆண்கள் பிரிவில் முதல் பரிசாக ரூ.11111 மற்றும் வெற்றி கோப்பை, இரண்டாம் பரிசாக ரூ.7777 மற்றும் வெற்றிக் கோப்பை, மூன்றாம் பரிசாக ரூ.4444 மற்றும் வெற்றிக் கோப்பை, நான்காம் பரிசாக ரூ.4444 மற்றும் வெற்றிக் கோப்பை மற்றும் ஏனைய பரிசுகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.
மேலும் பெண்கள் பிரிவில் முதல் பரிசாக ரூ.5555 மற்றும் வெற்றி கோப்பை, இரண்டாம் பரிசாக ரூ.3333 மற்றும் வெற்றி கோப்பை, மூன்றாம் பரிசாக ரூ.1111 மற்றும் வெற்றி கோப்பை, நான்காம் பரிசாக ரூ.1111 மற்றும் வெற்றிக் கோப்பை மற்றும் ஏனைய பரிசுகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.