பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வைக் கட்டுப்படுத்த, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
April 30, 2022
1
பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஈரோடு காளைமாடு சிலை அருகே கொங்கு வடக்கு மண்டல அமைப்பு செயலாளர் கே. சுரேஷ் காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாநகர மாவட்ட செயலாளர் சின்னசாமி முன்னிலையில் போராட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஈரோடு தெற்கு மாவட்டம் சீனிவாசன், நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் குட்டி என்கிற ஜனகராஜ், நாமக்கல் மத்திய வினோத்,
நாமக்கல் கிழக்கு மாவட்டம் சால்ட் பாலு, ஈரோடு வடக்கு குருநாதன், ஈரோடு மேற்கு மாவட்டம் சண்முகம், கரூர் மாவட்டம் மகேஸ்வரன்
உள்பட 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Super 👍👍👍
ReplyDelete