கோபிசெட்டிபாளையம், தமிழ்நாடு பள்ளிக் கல்வி துறையின் சார்பில் நம்பள்ளி நம்பெருமை பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு ஜனநாயக முறைப்படி தேர்வு
April 30, 2022
0
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தாலுக்கா. பா.வெள்ளாளபாளையம் கிராமம் ஊராட்சி ஒன்றியம் துவக்கப்பள்ளியில், தமிழ்நாடு பள்ளிக் கல்வி துறையின் சார்பில் நம்பள்ளி நம்பெருமை பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு ஜனநாயக முறைப்படி குழந்தைகளின் பெற்றோர்களைக் கொண்டு இன்று 30.04.2022 தேர்வு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வட்டார கல்வி மைய மேற்பார்வையாளர் ரவிக்குமார், பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பள்ளி மேலாண்மை குழுவின் தலைவராக கார்த்திகா அவர்களும், துணைத் தலைவராக கோமதி அவர்களும், கல்வியாளராக ITK தன்னார்வலர் மனிஷா அவர்களும் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டனர்.