கோபிசெட்டிபாளையத்தில் ஜாமியுல் கபீர் அஹ்லே சுன்னத் வல் ஜமாத் பள்ளிவாசல் சார்பாக மத இஃப்தார் நிகழ்ச்சி
May 03, 2022
0
கோபிச்செட்டிப்பாளையம் நகரின் மையப்பகுதியில் அமைத்துள்ள ஜாமியுல் கபீர் அஹ்லே சுன்னத் வல் ஜமாத் பள்ளிவாசல் சார்பாக மத நல்லிணக்க ரம்ஜான் நோம்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சியானது பள்ளிவாசல் நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்புராயன் மற்றும் கோபிசெட்டிபாளையம் நகரமன்ற தலைவர் N.R.நாகராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வரவேற்க்கப்பட்டு கோபிசெட்டிபாளையம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் பள்ளிவாசல் தலைவருமான M.M.மகபூப் பாஷா அவர்களின் முன்னிலையில் சுற்று வட்டார இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்றிணந்து நோம்பு கஞ்சி அருந்தி தங்கள் நோன்பினை முடித்துக் கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் அப்பகுதியைச் சார்ந்த வார்டு கவுன்சிலர்களும் திமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த நிர்வாகிகளும், உள்ளிட்ட பத்திரிக்கை நண்பர்களும் பலர் கலந்துகொண்டனர்.