அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் கீழ்பவானியில் கான்கிரீட் தளம் அமைப்பது தொடர்பாக கருத்து கேட்பு, ஆய்வுப் பணியை மேற்கொண்டார்.
April 25, 2022
0
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குருமந்தூர் அயலூர் அவ்வையார் பாளையம், செம்மாண்டம் பாளையம், சின்னகுளம், காவேரிபாளையம், வெள்ளாங்கோவில் ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் கீழ்பவானி கான்கிரீட் தளம் அமைப்பது தொடர்பாக கருத்து கேட்பு மற்றும் ஆய்வு பணியை மேற்கொண்டு விவசாயிகளிடம், வீட்டுவசதிதுறை அமைச்சர் சு.முத்துசாமி விவசாயிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும் வாய்க்கால் ஏரி வழியாகவே சென்று கீழ்பவானியில் 40 கிலோ மீட்டர் தூரத்தில் வாய்க்கால் பாலங்கள் பழுதடைந்துள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு அதிகாரிகளிடம் கூறி உடனடியாக விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பரிந்துரை செய்தார். இதில் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சிறுவலூர் எஸ்.ஏ.முருகன் மற்றும் ஒன்றிய கழக பொறுப்பாளர்களும், கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்.