Type Here to Get Search Results !

ஒளிரும் ஈரோடு ஃபவுண்டேஷன் சார்பாக, ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அவர்கள் பெத்தாம்பாளையம் பேரூராட்சிக்கு ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் புதிய டிராக்டர் மற்றும் டிரெய்லர் வழங்கினார்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், பெத்தாம்பாளையம் பேரூராட்சிக்கு குப்பைகளை அகற்றி சுற்றுச்சூழலையும், சுகாதாரத்தையும் மேம்படுத்த உதவும் நோக்கில் ஒளிரும் ஈரோடு ஃபவுண்டேஷன் சார்பாக ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் புதிய 24 HP டிராக்டர் மற்றும் டிரெய்லர் இன்று செவ்வாய்க்கிழமை (17.05.2022) வழங்கப்பட்டது.
இதன் முக்கிய நன்கொடையாளர் M/S. சசிஆனந்த் ஸ்பின்னிங் மில்ஸ், பெருந்துறை. மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைப்பெற்ற இந்த விழாவில் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஹெச்.கிருஷ்ணனுண்ணி I.A.S., அவர்கள் பெத்தாம்பாளையம் பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலரிடம் வழங்கினார்.
இதில் ஒளிரும் ஈரோடு ஃபவுண்டேஷன் தலைவர் திரு.M சின்னசாமி, M/S. சசிஆனந்த் ஸ்பின்னிங் மில்ஸ் நிர்வாக இயக்குனர்கள் திரு.சசி மற்றும் திரு. ஆனந்த், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர், ஒளிரும் ஈரோடு அறங்காவலர்கள் திரு.R.G. சுந்தரம், திரு.D.P. குமார், திரு.T.கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.