ஈரோடு பூம்புகார் விற்பனை நிலையத்தில் மரச்சிற்பங்கள் கண்காட்சி
May 15, 2022
0
ஈரோடு பூம்புகார் விற்பனை நிலையத்தில்
மரச்சிற்பங்கள் கண்காட்சி துவங்கியது. இதுகுறித்து விற்பனை நிலைய மேலாளர் ஜி.சரவணன் கூறியதாவது:-
"கண்காட்சி வரும் 26ஆம் தேதி வரை நடைபெறும். சுமார் ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான பல்வேறு மரச்சிற்பங்கள் சந்தன மர சிற்பங்கள், அரிய மரஓவியங்கள், சிற்பங்கள், நகை பெட்டிகள், சஹரன்பூர் மரத்தில் செய்யப்பட்ட மசாஜ் பொருட்கள், சந்தன மரக்கட்டைகள், குழந்தைகளுக்கு மரத்தினாலான விளையாட்டுப் பொருட்கள் மற்றும் எண்ணற்ற பரிசு பொருட்கள்,
கலைப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
குறைந்த பட்சம் ரூபாய் 100 முதல் 80,000 வரையிலான கைவினை பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. குறைந்தபட்சமாக கல்கி பகவான்
குதிரைகள் அமர்ந்திருப்பது போன்ற சந்தனமரச் சிற்பம் விற்பனைக்கு வந்துள்ளது.
அதன் விலை 80-ஆயிரம் ஆகும். கடன் அட்டைகள் சேவை கட்டணமின்றி ஏற்றுக்கொள்ளப்படும். அனைத்து கலைப் பொருட்களுக்கும்
10- சதவீத சிறப்பு தள்ளுபடி உண்டு. இக்கண்காட்சியில் காட்சிக்கும் விற்பனைக்கும் இருந்து வந்துள்ளன. தங்கள் உள்ள கலைப்பொருட்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ளது தங்களது இல்லத்திற்கு அழகூட்டஇக்கலை சிற்பங்களை மக்கள் வாங்குவது மூலம் கைவினைஞர்களும் பண்டைய கலையையும் பாதுகாக்க முடியும் விற்பனை இலக்கு ரூபாய் 2- லட்சம் ஆகும்" இவ்வாறு விற்பனை நிலைய மேலாளர் ஜி.சரவணன் அவர் கூறினார்.