ஈரோட்டில் தமிழன் பரோட்டா என்ற பெயரில் உணவகம் திறப்பு விழா - மொடக்குறிச்சி எம்எல்ஏ .சி.கே.சரஸ்வதி திறந்து வைத்தார்,
May 15, 2022
0
ஈரோட்டில் பெருந்துறை ரோட்டில், டீச்சர்ஸ் காலனி பஸ் நிறுத்தம் அருகில், ஈக்விடாஸ் வங்கி எதிரில் புதிதாக "தமிழன் பரோட்டா" உணவகம் தொடங்கப்பட்டது.
இதில் திருமதி. கவிதாபிரியாஅஜய் மற்றும் திரு.ஏ.வி. அஜய் (எம்.டி., வூட்டு நியூட்ரிஷன், சென்னை) முன்னிலையில் நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.சி.கே.சரஸ்வதி அவர்கள் "தமிழன் பரோட்டா " உணவகத்தை திறந்து வைத்தார்.
“ தமிழன் பரோட்டா’’ ஒரு தென்னிந்திய வகை (தமிழ் உணவுகள் துல்லியமாக) உணவகமாகும். இது இட்லி, தோசை, பரோட்டா, சிக்கன், மட்டன் பிரியாணி, வெஜ் பிரியாணி, கரி தோசை, சிக்கன் & மட்டன் சுக்கா, சைவ மற்றும் அசைவ உணவுகள் போன்றவற்றை வழங்குகிறது. வாடிக்கையாளர்களுக்கு சுவையை அதிகரிக்கவேண்டும் என்பதற்காக அஜினோமோட்டோ மற்றும் இதர செயற்கை பொருட்களை சேர்ப்பதில்லை. கொங்கு மற்றும் மதுரை மண்டலத்தில் வீடுகளில் சமைக்கப்படும் உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதே இந்த உணவகத்தின் சிறப்பம்சமாகும் .
மேலும் “தமிழன் பரோட்டா’’ ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விக்கி, ஸ்மோட்டோ போன்றவற்றின் மூலம் ஆர்டர்களை எடுத்து விநியோகம் செய்கிறது. தமிழ்நாடு சார்ந்த உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதை குறிக்கோளாக கொண்டு இது செயல் படுவதாக அதன் உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.