கொளத்துப்பாளையத்தில் புதியதாய் கட்டியுள்ள ஸ்ரீ கன்னிமூல கணபதி, ஸ்ரீ ஞான சக்தி மாரியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா
May 17, 2022
0
ஈரோடு மாவட்டம் கங்காபுரம் கிராமம் கொளத்துப்பாளையத்தில் புதியதாய் கட்டியுள்ள ஸ்ரீ கன்னிமூல கணபதி, ஸ்ரீ ஞான சக்தி மாரியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா நான்கு கால யாக பூஜையுடன் வெகு விமர்சையாக 15.05.2022 அன்று நடைபெற்றது.
கொங்கு பகுதிகளிலேயே முதன்முறையாக மாரியம்மனுக்கு ஆகம விதிகளின்படி கோபுரம், கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், வசந்த மண்டபம் ஆகியவை முழுமையாக கருங்கற்களால் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஒன்பது ஆண்டுகளாக நடைபெற்று வந்த புதிய ஆலய திருப்பணி நிறைவடைந்ததாக திருக்கோவில் கமிட்டியினர் தெரிவித்தனர். 4 நாட்களாக சிறப்பாக நடைபெற்று வந்த கும்பாபிஷேக விழாவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்களும் பல்வேறு கட்சிகளை சார்ந்த அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
Tags