கோபிசெட்டிபாளையத்தில் அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கான மாரத்தான் போட்டி
May 21, 2022
0
கோபிசெட்டிபாளையத்தில் அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஏழு கிலோமீட்டர் மாரத்தான் போட்டி நடைபெற்றது.
ஸ்ரீ நேசனல் பள்ளி நடத்திய அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கான 7 கிலோமீட்டர் மாரத்தான் போட்டியை கோபிச்செட்டிப்பாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆறுமுகம் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
மேலும் பள்ளி வளாகத்தில் தொடங்கிய மராத்தான் போட்டி கோபிசெட்டிபாளையம் முக்கிய நகர பகுதியான கடை வீதிகள் வழியாக மாணவ மாணவிகள் மரத்தான் போட்டி பள்ளி வளாகத்திற்குள் வந்து முடிவடைந்தது இதில் முதல் இடம் பிடித்த அந்தியூர் தருணா, வெற்றி பெற்று ஒரு கிராம் தங்க நாணயத்தை கைப்பற்றினார். மேலும் இரண்டாவது இடம் பவித்ரா 3வது இடம் ரீனா ஆகியோருக்கு வெள்ளி நாணயம் பரிசுகள் வழங்கப்பட்டது. இதேபோல் ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்ற பிரகாஷ்க்கு தங்க நாணயம், மற்ற இடங்களை பிடித்த விஜயகுமார், வினோத்குமார் ஆகியோருக்கு வெள்ளிக்காசு வழங்கப்பட்டது.
இதில் ஸ்ரீ நேசனல் பள்ளி தாளாளர் விஷ்ணு செந்தூரன், கல்வி இயக்குனர் அனுபமா, செங்கோட்டையன் அறக்கட்டளை நிர்வாகி சகுந்தலா, மருத்துவர்கள் ஸ்ரீதர், ரவீந்திரன், சங்ககிரி செட்டியார் துணி கடை உரிமையாளர் நிரஞ்சன் குமார், செட்டியார் நகை மாளிகை உரிமையாளர் அபிலாஷ் மற்றும் பயிற்சியாளர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.