கோபிசெட்டிபாளையம், ஈரோடு வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் பதவி ஏற்பு விழா நடைபெற்றது.
May 21, 2022
0
ஈரோடு வடக்கு மாவட்ட பாரதிய ஜனதாக் கட்சித் தலைவராக வழக்கறிஞர் கலைவாணி விஜயகுமார் அவர்களை பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்ததை தொடர்ந்து, கோவை ஈரோடு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. பதவியேற்பு விழாவிற்கு செந்தில்குமார் தலைமை தாங்கினார், மாவட்ட பார்வையாளரும் மாநில செயற்குழு உறுப்பினருமான சித்திவிநாயகர் வரவேற்றார், மாநில செயற்குழு உறுப்பினர் மோகன்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் அஜித்குமார், முன்னாள் மாவட்ட பொது செயலாளர் பிரியா ரமேஷ், மாநில பிரச்சார அணி செயலாளர் பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் திருப்பதி நாராயணன், மாநில பொது செயலாளர் முருகானந்தம், மாநில செயலாளர் மலர்கொடி, மாநில விவசாய அணி தலைவர், மாநில செயற்குழு உறுப்பினர் மணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். அதை தொடர்ந்து மாவட்ட தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட கலைவாணி அப்போது பேசும்போது- ஈரோடு வடக்கு மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு கட்சி தொண்டர்களையும் நியாயமான பிரசினைகள் கோரிக்கைகளை நேரடியாக தீர்த்து வைத்து, கட்சி வளர்ச்சிக்காக அனைவரும் பாடுபட வேண்டும் என்று என்று பேசினார்.