கோபி வட்ட கிளையில், கோபி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
May 21, 2022
0
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயற்குழு முடிவின்படி கோபி வட்ட கிளையில், கோபி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. கோபி வட்டக்கலை தலைவர் தோழர் கே கே ராஜன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், தோழர் பி கதிரவன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வரவேற்புரையாற்றினார். தோழர் M.R.ரஜிக்குமார் கோபி வட்டக் கிளை செயலாளர் விளக்க உரை ஆற்றினார். தோழர் பழனி வேலுகோபி வட்ட கிளை துணை தலைவர் நிறைவுரை ஆற்றினார். தோழர் கோபால் வருவாய் துறை நன்றியுரை ஆற்றினார். மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு துறை சங்க நிர்வாகிகளும் முன்னணி தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.