கோபிசெட்டிபளையம் அடுத்துள்ள குள்ளம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் உறுப்பினர்களுக்கு வழங்பப்பட்ட சுமார் 15 லட்சம் மதிப்பிலான கால்நடை பரமரிப்பு மற்றும் புதிய கரவை மாடுகள் வாங்க கடன் உதவிகளை முன்னாள் அமைச்சரும் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்..
கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள குள்ளம்பாளையம்யத்தில் செயல்பட்டுவரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 1000 க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்,
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் உறுப்பினர்கள் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் தகுதியின் அடிப்படையில் பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது,
அதன் ஒரு பகுதியாக இன்று கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் நடைமுறை மூலதன கால்நடை பராமரிப்பு,புதிய கரவை மாடுகள் வாங்குவதற்க்கான கடன் வழங்கும் விழா சங்க செயலாளர் கே.கே.மயில்சாமி தலைமையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது,
இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.செங்கோட்டையன் புதிதாக கரவை மாடுகள் வாங்கவும், பராமரிப்பு பணிகளுக்காவும் 25 நபர்களுக்கு சுமார் 15 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளுக்கான காசோலைகளையும், தொடர்ந்து 50 ஆயிரம் மதிப்பில் மாற்றுதிறனாளிகளுக்கு கடனுதவி, தனிநபர் கடன் மற்றும் தொழிற்கடன்களுக்கான காசோலைகளை வழங்கினார்.
இந்த கடனுதவி வழங்கும் நிகழச்சியில் ஊராட்சி ஒன்றிய குழுதலைவர் மௌலீஸ்வரன், ஒன்றிய கழக செயலாளர் குறிஞ்சிநாதன், கோபி வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் முத்துச்சாமி, அருள்ராமச்சந்திரன், முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர்கள் சத்யபாமா, காளியப்பன், கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த விஜயகுமார், மணிமண்ணன், செங்கோட்டையன், ஒ.வி.மூர்த்தி மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.