Type Here to Get Search Results !

ஈரோடு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியில்‌ இளைஞர்‌ திறன்‌ திருவிழாவினை அமைச்சர்‌ திரு.சு.முத்துசாமி அவர்கள்‌ தொடங்கி வைத்து, சான்றிதழ்களை வழங்கினார்‌.

ஈரோடு மாவட்டம்‌, ரங்கம்பாளையம்‌ ஈரோடு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியில்‌ நேற்று (04.06.2022) மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.ஹெச்‌.கிருஷ்ணனுண்ணி அவர்கள்‌ தலைமையில்‌, மாண்புமிகு ஈரோடு மாநகராட்சி மேயர்‌ திருமதி. சு.நாகரத்தினம்‌, ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர்‌ திரு. இ. திருமகன்‌ ஈவெரா., ஆகியோர்‌ முன்னிலையில்‌, மாண்புமிகு வீட்டுவசதி மற்றும்‌ நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர்‌ திரு. சு.முத்துசாமி அவர்கள்‌, தமிழ்நாடு மாநில ஊரகம்‌ மற்றும்‌ நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்‌ மகளிர்‌ திட்டம்‌ மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில்‌, இளைஞர்‌ திறன்‌ திருவிழாவினை தொடங்கி வைத்து, திறன்‌ வளர்ப்பு பயிற்சியில்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்‌.
இந்நிகழ்ச்சியில்‌, மாண்புமிகு வீட்டுவசதி மற்றும்‌ நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர்‌ திரு.சு.முத்துசாமி அவர்கள்‌ தெரிவித்ததாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சித்‌ துறையின்‌ கீழ்‌ செயல்பட்டு வரும்‌ மகளிர்‌ மேம்பாட்டு நிறுவனம்‌ (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்‌) சார்பில்‌ கடந்த 25.04.2022-ல்‌ அன்று சென்னை ராணி மேரி கல்லூரியில்‌ “இளைஞர்‌ திறன்‌ திருவிழா” திட்டத்தினை தமிழகத்தில்‌ முதல்‌ முதலாக துவக்கி வைத்தார்கள்‌.
அதனைத்‌ தொடர்ந்து, இன்று (04.06.2022) ஈரோடு மாவட்டத்தில்‌, மகளிர்‌ திட்டத்தின்‌ சார்பில்‌ “இளைஞர்‌ திறன்‌ திருவிழா” துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இம்முகாமில்‌, ஈரோடு மாவட்டம்‌, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்‌, தீனதயாள்‌ உபத்யாய கிராமின்‌ கெளசல்ய யோஜனா திட்டத்தின்‌ கீழ்‌ ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 18 வயது முதல்‌ 45 வயது வரையுள்ள ஆண்‌, பென்‌ (இருபாலருக்கும்‌) அரசு துறையின்‌ கீழ்‌ தீனதயாள்‌ உபத்யாய கிராமின்‌ கெளசல்ய யோஜனா (DDUGKY), ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம்‌(RESTI), தமிழ்நாடு திறன்‌ மேம்பாட்டு கழகம்‌ (TNSDC), பிரதமமந்திரி கெளசல்ய விகாஸ்‌ யோஜனா(PMKVY), மாவட்ட தொழில்‌ மையம்‌ (DIC) மற்றும்‌ தமிழ்நாடு ஆதிதிராவிடர்‌ குடியிருப்பு மேம்பாட்டு கழகம்‌(TAHDCO) போன்ற திட்டங்களில்‌ CNC Operator, Accounts with GST, Front Office Executive, Sewing Machine Operator, Food & Beverages Service, அலங்கார ஆடை வடிவமைப்பு, அழகுக்கலை, உதவி செவிலியர்‌, கணினி சில்லறை விற்பனை வணிகம்‌,BPO- Voice & Non Voice, துரித உணவு தயாரித்தல்‌, போன்ற இலவச திறன்‌ பயிற்சிகள்‌ வழங்கி தனியார்‌ நிறுவனங்களில்‌ 100% வேலைவாய்ப்பு / சுய தொழில்‌ செய்வதற்கு ஏதுவாக அரசு மானியத்துடன்‌ கடன்‌ உதவி வழங்கிட, இலவச திறன்‌ பயிற்சிகளுக்கு இளைஞர்களை தேர்வு செய்யும்‌ பொருட்டு, இளைஞர்‌ திறன்‌ திருவிழா நடைபெறுகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ ஒவ்வொரு துறையிலும்‌ ஆய்வு மேற்கொண்டு, என்னென்ன முன்னேற்றம்‌ கொண்டு வரலாம்‌ என மாண்புமிகு அமைச்சர்‌ பெருமக்கள்‌ மற்றும்‌ அலுவலர்களுடன்‌ ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்‌. அதனடிப்படையில்‌ ஈரோடு மாவட்டத்தின்‌ வளர்ச்சிக்காக எண்ணற்ற திட்டங்கள்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில்‌, ஈரோடு மாநகராட்சியில்‌ பெருகி வரும்‌ மக்கள்‌ தொகை மற்றும்‌ போக்குவரத்து நெரிசல்‌ காரணமாக ஏற்படும்‌ பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக சோலார்‌ பகுதியில்‌ புதிய பேருந்து நிலையம்‌ அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்‌. அந்த வகையில்‌, ஈரோடு மாவட்டத்தில்‌ ஏறத்தாழ 85 புதிய திட்டங்கள்‌ துவக்கி வைக்கப்பட்டு, பணிகள்‌ நடைபெற்று வருகிறது. மேலும்‌, சிக்கைய்ய நாயக்கர்‌ இக்கல்லூரியில்‌ மாணவ, மாணவியர்கள்‌ மற்றும்‌ இளைஞர்களை ஊக்குவிக்கும்‌ வகையில்‌ விளையாட்டு மைதானம்‌, இந்திய ஆட்சிப்பணி அகாடமி மற்றும்‌ நூலகம்‌ போன்றவை அமைக்க ஏற்பாடு செய்யப்படவுள்ளது என தெரிவித்தார்‌. தொடர்ந்து, மாண்புமிகு வீட்டுவசதி மற்றும்‌ நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர்‌ திரு.சு.முத்துசாமி அவர்கள்‌ டிஎம்‌ டபள்யூ எசுகேசனல்‌ டிரஸ்ட்‌ மற்றும்‌ தண்டபாணி ரூரல்‌ டிரஸ்ட்‌, கோபிசெட்டிபாளையம்‌ ஆகிய நிறுவனத்தின்‌ மூலம்‌ திறன்‌ வளர்ப்பு பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 21 நபர்களுக்கும்‌, பயிற்சி முடித்த 2 நபர்களுக்கும்‌, வாழ்ந்து காட்டுவோம்‌ திட்டத்தின்‌ மூலம்‌ சுற்றுக்சூழல்‌ மற்றும்‌ சமூக மேலாண்மை பயிற்சி பெற்ற 6 நபர்களுக்கும்‌ சான்றிதழ்களை வழங்கினார்‌. முன்னதாக, ஈரோடு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரி, மாவட்ட தொழில்‌ மையம்‌, ஈடிசியா, மகளிர்‌ திட்டம்‌ ஆகியவற்றின்‌ சார்பில்‌ அமைக்கப்பட்டிருந்த திட்டங்கள்‌ தொடர்பாக அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி மற்றும்‌ இணையதளத்தில்‌ பதிவு செய்யும்‌ பணி ஆகியவற்றினை பார்வையிட்டார்‌. மேலும்‌, மான்புமிகு வீட்டுவசதி மற்றும்‌ நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர்‌ திரு.சு.முத்துசாமி அவர்களிடம்‌, ஈரோடு அரசு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரி நிர்வாகத்தின்‌ சார்பில்‌, மாணவ, மாணவியர்களுக்கு மாலை நேரங்களில்‌ கூடுதல்‌ பேருந்து வசதியினை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை மனுவினை அளித்தனர்‌. இந்நிகழ்ச்சியில்‌, மரியாதைக்குரிய துணை மேயர்‌ திரு. வே.செல்வராஜ்‌, திட்ட இயக்குநர்‌ (மகளிர்‌ திட்டம்‌) திருமதி. டி.கெட்சி லீமா அமலினி, ஈரோடு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரி முதல்வர்‌ திரு. ரா.சங்கரசுப்பிரமணியன்‌, உதவி திட்ட அலுவலர்கள்‌ திருமதி.சாந்தா, திரு.அன்பழகன்‌ உட்பட மாணவ, மாணவியர்கள்‌ மற்றும்‌ துறை சார்ந்த அலுவலர்கள்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.