ஈரோடு நந்தா கல்வி நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டு துறையான "மனிதம்" சார்பில் உலக இரத்த நன்கொடையாளர்கள் தினத்தினை முன்னிட்டு "மாரத்தான் 2022" தொடர் ஓட்டம் மற்றும் இரத்ததான சிறப்பு முகாம் இனிதே நடைபெற்றது.
இதில் ஆண்களுக்கான மினி மாரத்தான் தொடர் ஓட்டத்தினை ஈரோடு காவல் கண்காணிப்பாளர் முனைவர் வி. சசிமோகன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இதில் பங்கு பெற்றவர்கள் வ.உ.சி பூங்காவிலிந்து ஒட்டத்தினை தொடங்கி நந்தா தொழில் நுட்ப கல்லூரி வளாகம் வரையிலான 20 கிமீ தூரம் கடந்து முடித்தார்கள். இத்தொடர் ஒட்டத்தில் சுமார் 1500 க்கும் மேற்பட்டோர் மிகுந்த ஆர்வமுடன் கலந்து கொண்டார்கள். அதே நேரத்தில், பெண்களுக்கான மினி மாரத்தான் தொடர் ஓட்டத்தினை ஈரோடு கிழக்கு தொகுதிக்கான லோக்சபா சட்டமன்ற உறுப்பினர் திரு. ஈ. திருமகன் ஈவேரா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இதில் பங்கு பெற்றவர்கள் வ.உ.சி பூங்காவிலிந்து ஓட்டத்தினை தொடங்கி நந்தா சிட்டி சென்ட்ரல் பள்ளி வளாகம் வரையிலான 10 கிமீ தூரம் கடந்து முடித்தார்கள். இத்தொடர் ஓட்டத்தில் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் மிகுந்த மகிழ்ச்சியுடன் கல்ந்துக் கொண்டார்கள்.
மெகா இரத்ததான சிறப்பு முகாமின் துவக்க விழா நடைபெற்றது. ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் உயர்திரு வி.சண்முகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இம்முகாமினை சிறப்பு விருந்தினர் லோக்சபா சட்டமன்ற உறுப்பினர் திரு. ஈ. திருமகன் ஈவேரா அவர்கள் துவக்கி வைத்து உரையாற்றினார்.
அப்போது இரத்த தானத்தின் சிறப்புகளையும், முகாமில் இரத்ததானம் செய்யவிருக்கும் நன்கொடையாளர்களுக்கு தனது பாராட்டுகளையும் தெரிவித்தார்.
மேலும், "மாரத்தான் 2022" தொடர் ஓட்டத்தில் தலா முதல் பத்து இடங்ளை தக்க வைத்து வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர் ஈரோடு காவல் கண்காணிப்பாளர் முனைவர் வி.சசிமோகன் அவர்கள் பரிசுகளை வழங்கி தெரிவித்தார். தனது பாராட்டுகளை
பின்னர் ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலர் திரு எஸ். நந்தகுமார் பிரதீப். நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் திரு எஸ்.திருமூர்த்தி, முதன்மை நிர்வாக அதிகாரி டாக்டர் எஸ். ஆறுமுகம், மற்றும் நந்தா தொழில் நுட்ப வளாகத்தின் இயக்குனர் முனைவர் செந்தில் ஜெயவேல் ஆகியோர் "மாரத்தான் 2022" தொடர் ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கும். இரத்த வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். தான முகாமில் பங்குகொண்டவர்களுக்கும் தனது
இந்த முகாமில் இரத்த நன்கொடையாளர்கள் மூலம் சுமார் 520 யூனிட் இரத்ததினை ஈரோடு சுகாதார சேவை மையத்தின் துணை இயக்குநர் மருத்துவர் கே. ஜெகதீஸ்குமார், சித்தோடு அரசு சுகாதார சேவை மையத்தின் மருத்துவ அலுவலர் மருத்துவர் டி. பிரபு மற்றும் திண்டல் அரசு சுகாதார சேவை மையத்தின் மருத்துவ அலுவலர் மருத்துவர் எஸ். சங்கர நாராயணன் ஆகியோர் கொண்ட மருத்துவக்குழுவினர் பெற்றுக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.