ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுக்காட்டை சேர்ந்தவர் பிரகாஷ்.
இவருக்கும் ஈரோடு அடுத்துள்ள பாசூர் பகுதியை சேர்ந்த விமலாதேவி என்பவருக்கும் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
பிரகாஷுக்கு குடிப்பழக்கம் இருந்ததால், கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் கடந்த இருபத்து ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, தனது மகனையும் மகளையும் அழைத்துக் கொண்டு, விமலாதேவி தன் தாய் வீட்டிற்கு சென்றார்.
இதையடுத்து, தனியாக வசித்து வந்த பிரகாஷ், குடிப்பழக்கத்திற்கு அடிமையான தாக கூறப்படுகிறது.
மது குடித்து கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரகாஷுக்கு, நேற்று கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.
வலி தாங்கமுடியாத பிரகாஷ் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து வாந்தி எடுத்துக் கொண்டிருந்தார்.
இதைக் கண்ட அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பிரகாஷ் உயிரிழந்தார்.
இதுகுறித்து அந்தியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.