ஈரோடு வடக்கு மாவட்டத்தில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99-ம் ஆண்டு பிறந்தநாள் நிகழ்ச்சி சத்தியமங்கலம் நகர கழகம் மற்றும் இளைஞர் அணி சார்பில்
19.06.2022 அன்று
மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள், நகர மன்ற தலைவர் மற்றும் நகரக் கழகச் செயலாளருமான திருமதி. ஜானகிராமசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம்
கழகக் கொடியை ஏற்றி இனிப்பு வழங்கி மாபெரும் இரத்த தான முகாமை துவக்கிவைத்து மரக்கன்றுகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் நடராஜ் அவர்கள் நகர இளைஞர் அணி அமைப்பாளர் ஸ்ரீராம்வேலுச்சாமி மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், நகர கழக நிர்வாகிகள் சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.