ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம்,
பா. வெள்ளாளபாளையம் கிராமத்தில் செயல்பட்டுவரும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் எஸ்பி நகர் மையம் மனிஷா முத்துக்காளை மடை கீதா பூங்கோதை பா வெள்ளாளபாளையம் துளசி மணி நான்கு பேர் ஒருங்கிணைந்து தன் மையங்களில் பயிலும் 48 மாணவர்களைக் கொண்டு137 பனை மர விதைகளை நடும் நிகழ்ச்சி வாய்க்கால் கரை பகுதியில் நடைபெற்றது.. நிகழ்ச்சி குறித்து தன்னார்வலர்கள் கூறும் பொழுது, எங்கள் மையங்களில் பயிலும் மாணவர்களுக்கு படிக்கும் கல்வியுடன் சூழலையும் இயற்கையையும் நேசிக்க கற்றுக் கொடுக்க வேண்டும் எனமுடிவு செய்தோம். அதன்முதல் நிகழ்வு இன்று நடைபெறுகிறது நிகழ்ச்சி தொடங்கும் முன்பு பனை மரம் பற்றிய பயன்களையும் அதன் நன்மைகளையும் பனைமரத்தை நாம் ஏன் பாதுகாக்க வேண்டும் என விழிப்புணர்வையு கி.சாந்தி
இல்லம் தேடி கல்வி கோபி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோபி வட்டார ஒருங்கிணைப்பாளர் ச CSO R.மாரிமுத்து அவர்களும் குழந்தைகளிடம் உரையாடினர். குழந்தைகளும் நிகழ்ச்சி தொடங்கும் முன் பனை மரம் பற்றிய பாடலை பாடி உற்சாகமாக பாடினார்கள் குழந்தைகள் பாடிய பாட்டு
என்ன மரம் தெரியுமா..
உயர்ந்த மரம் உயர்ந்த மரம் உறிஞ்சி தின்ன நுங்கு தரும் கருகருன்னு வளர்ந்த மரம் கருப்பட்டி கொடுக்கும் மரம்..
காட்டுக்குள்ள நிறைந்த மரம் காய்கனிந்து பழமும் தரும் ஏழைக்கு வேலை தரும் வீட்டுக்கு ஓலை தரும்
நன்றாகத் தெரியுமே பனை மரம் தான் பனை மரம் தான் அதை நாமும் நடுவோம் என உற்சாகமாக பாட்டு பாடி குழந்தைகள் பனை மர விதைகளை நட்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர் வட்டார இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர்CSk மாரிமுத்து..கி சாந்தி
இல்லம் தேடி கல்வி கோபி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்..