ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திபுரம் பகுதியில் வசித்து வருபவர்கள் வேணுகோபால் நம்பியூர் அரசு போக்குவரத்து பணிமனை கிளையில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார் மற்றொருவர் வெற்றிவேல் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் செயலாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் வேணுகோபால் 17.06.2022 அன்று தனது வீட்டை பூட்டிவிட்டு தனது மற்றொரு வீடான திருப்பூரில் தனது குடும்பத்துடன் இருந்துள்ளார் நேற்று தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவை உடைத்து உள்ளே சென்று பீரோ மற்றும் அறைகளில் பொருட்கள் சிதறிக் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வெற்றிவேல் தனது வீட்டை இந்திராணி என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார் அவரது வீட்டிலும் கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளே பீரோ மற்றும் அறைகளில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தது இரண்டு வீடுகளிலும் நகை பணம் ஏதும் கிடைக்காததால் கொள்ளையர்கள் ஏமாந்து சென்றனர் மேலும் கைரேகை தெரியாதவாறு பனியன் துணி மூலம் கைகளை துடைத்து விட்டு சென்றுள்ளனர்.
இதுகுறித்து நம்பியூர் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.