"உனக்குள் உலகம்" என்ற புதிய மாத இதழின் வெளியீட்டு விழா (18.06.2022) சனிக்கிழமை, ஈரோடு கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பில்டர்ஸ் அசோசியேஷன் ஹாலில் நடைபெற்றது. இதழின் ஆசிரியரும் மற்றும் வெளியீட்டாளருமான வி.லோகநாதன், மற்றும் தமிழ்நாடு முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர், நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியனின் (NJU)
தமிழக மேற்கு மண்டல தலைவர், ஈரோடு மாவட்ட பிரஸ் மற்றும் மீடியா நலச்சங்கத்தின் தலைவர்
தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் வெளிவரும் இந்த இதழில், நடப்பு விவகாரங்கள் மற்றும் வணிகம் போன்ற நிகழ்வுகள் தொடர்பான அனைத்து தகவல்களும் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சுகாதாரம், அரசியல், விளையாட்டு, பொருளாதாரம், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் போன்ற செய்தித்தாளின் பல்வேறு பிரிவுகளும் உள்ளடக்கி சிறப்புடன் இந்த இதழ் வெளிவரும் என தெரிவித்துள்ளனர்.
இவ்விழாவில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் தமிழ்நாடு முன்னேற்றக் கழகத்தின் தலைவர் உயர்திரு. டாக்டர். எஸ் கே சாமி அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக கலந்து கொண்டு "உனக்குள் உலகம்" மாத இதழை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையில், "உனக்குள் உலகம்" இதழ், "அறியாமையை நீக்கி, திறமையை வெளிக்கொணரும் வண்ணம் தொடர்ந்து மக்களுக்கான படைப்புகளை ஒவ்வொரு மாதமும் கொண்டு செல்ல வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக உயர்திரு எஸ். என். சிவகுமார் அவர்கள் (சிவாஜி & கோ), உயர்திரு நித்யன் கார்த்திக் அவர்கள் (திரைப்பட இசையமைப்பாளர்), உயர்திரு கே. கே. விமல் கருப்பண்ணன் அவர்கள் (ஈரோடு சிறகுகள் தலைவர்), உயர்திரு முஹம்மத் அஷ்ரப் அவர்கள் மலபார் கோல்டு & டைமெண்ட்ஸ்), உயர்திரு ஆர். பி. முருகன் அவர்கள் (ஸ்ரீ கிருஷ்ணா டிவி ஈரோடு), உயர்திரு செல்வி பவித்ரா அவர்கள் (யோகா உலக சாதனையாளர்), மற்றும் உயர்திரு சி. நந்தகுமார் அவர்கள் (நிறுவனர், சேட்டக்கா ஜனநாயக சமூகம்) உள்பட பலர் பங்கேற்றனர்.
"உனக்குள் உலகம்" மாத இதழின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளருமான வி.லோகநாதன், மற்றும் ஈ.தனஞ்ஜெயன் ஆகியோர், சிறப்பு விருந்தினர்களுடன் சேர்ந்து இதழை வெளியிட்டனர்.
இறுதியில்
நன்றியுரையாற்றிய, இதழின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளருமான வி.லோகநாதன்,
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்புரையாளர், காவலர்கள் மற்றும் ஊடத்துறை உள்பட அனைவரிடத்தில் மிகவும் வெளிப்படையாக தனது முதல் மேடை பேச்சிலேயே அனைவரையும் வியக்கவைத்தார்.
இந்நிகழ்ச்சியை திருக்குறள் உரையாசிரியர் உயர்திரு. திருமலை அழகன் அவர்கள், தமிழ்துறை தலைவர், (பாரதி வித்யா பவன் பள்ளி) வெகுசிறப்பாகத் தொகுத்து வழங்கினார்.