ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் கமலாலயத்தில் இன்று 07.07.2022 ஈரோடு தெற்கு மாவட்ட மற்றும் மண்டல பாஜக ஊடகப்பிரிவு நிர்வாகிகள் அறிமுக கலந்தாலோசனை கூட்டம்
July 07, 2022
0
ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் கமலாலயத்தில் இன்று 07.07.2022 ஈரோடு தெற்கு மாவட்ட மற்றும் மண்டல பாஜக ஊடகப்பிரிவு நிர்வாகிகள் அறிமுக கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக துணைத் தலைவர் பாஸ்கரன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஈஸ்வரமூர்த்தி, எஸ். எம். செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் க.அண்ணாதுரை, துணைத் தலைவர் சிவப்பிரகாசம், பிரகாஷ், மாவட்டச் செயலாளர்கள் கோவிந்தராஜ், முத்து சிதம்பரம், ராஜவேல், S.அண்ணாதுரை, கனகராஜ், பெரியசேமூர் மேற்கு மண்டல தலைவர் பாலசுப்பிரமணியன், துணைத்தலைவர் சுப்பிரமணி, செயலாளர்கள் சிவக்குமார், லட்சுமிகாந்தன், பிரபாகரன் ஆகியோர் பங்கேற்றனர்.