பணியாளர்களுக்கு ரூ.81.59 இலட்சத்திற்கான காசோலைகளை ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் தலைவர் என்.கிருஷ்ணராஜ் அவர்கள் வழங்கினார்.
July 07, 2022
0
ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் கூடுதல்
பதிவாளர்/மேலாண்மை இயக்குநர் மரு.சு.செந்தமிழ்செல்வி தலைமையில்
நடைபெற்ற நிகழ்ச்சியில் கோலக்காரனூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம்,
புதுரோடு அண்ணாநகர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம் மற்றும் ஈரோடு
கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி ஆகியவற்றில்
பணிபுரிந்து, பணியின்போது உயிரிழந்த மூன்று பணியாளர்களுக்கு குடும்ப நலக்
காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.00 இலட்சம் வீதம் ரூ.9.00 இலட்சத்திற்கான
காசோலைகள் மற்றும் ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் பணியில்
இருந்து ஓய்வுப்பெற்ற 4 பணியாளர்களுக்கு ரூ.7259 இலட்மும் ஆக மொத்தம்
ரூ.81.59 இலட்சத்திற்கான காசோலைகளை வங்கியின் தலைவர்
என்.கிருஷ்ணராஜ் அவர்கள் வழங்கினார்.
உடன் ஈரோடு சரகத் துணைப்பதிவாளர் கு.நர்மதா, வங்கியின்
இயக்குநர்கள் இரா.மனோகரன், வி.எம்.லோகநாதன், பி.ராமன், கூட்டுறவு
சார்பதிவாளர் எம்.தர்மராஜ், வங்கி உதவிப்பொது மேலாளர்கள் எஸ்.சந்திரமோகன்,
எஸ்.ஆறுமுகம் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் இருந்தனர்.