பாரதி ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் (10.07.2022)
July 11, 2022
0
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் 10.07.2022 ஞாயிற்றுக்கிழமை வேலூர் மாவட்டம், அரப்பாக்கம், ரமணி சங்கர் மஹாலில் மாநிலத் தலைவர், மக்களின் தலைவர் திரு. கே. அண்ணாமலை அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நடைபெற்ற செயற்குழு கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளர்களாக அகில இந்திய இணை பார்வையாளர் திரு. சுதாகர் ரெட்டி, மத்திய அமைச்சர் திரு. எல். முருகன், சட்டமன்ற குழு தலைவர் திரு. நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் திரு. பொன். ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் திரு. எச். ராஜா, திரு. சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்களுடன்,
மாநிலத் துணைத் தலைவர்கள் திரு. வி. பி. துரைசாமி, திரு. கே. பி. ராமலிங்கம், திரு. கே. எஸ். நரேந்திரன், திரு. கரு. நாகராஜன், திரு. பி.கனகசபாபதி, திரு. நாராயணன் திருப்பதி, திரு. ஏ. ஜி. சம்பத், திரு. ஆர். சி. பால் கனகராஜ் ஆகியோர்களுடன்,
மாநில பொதுச் செயலாளர்கள் திரு. எம். முருகானந்தம், திருமதி. கார்த்தியாயிணி, திரு. வி. பாலகணபதி, திரு. ஏ. பி. முருகானந்தம், திரு. இராம ஸ்ரீநிவாசன் அவர்களுடன் சட்டமன்ற உறுப்பினர்களான நாகர்கோவில் தொகுதி திரு. எம். ஆர். காந்தி மற்றும் மொடக்குறிச்சி தொகுதி டாக்டர் சி. சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டு நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாநில அணிகள், பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் மாவட்ட பார்வையாளர்கள், மாவட்ட தலைவர்கள் ஆகியோர் கட்சியின் எதிர்கால பணிகளில் சிறப்பான முறையில் செயலாற்றக்கூடிய வகையில் பல்வேறு கருத்துருக்களை முன்வைத்தும், கூட்டத்தின் முக்கிய தீர்மானமாக மரபு சார்ந்த விவசாயத்தில் மிகப் பெரும் தொண்டாற்றிய திரு. நம்மாழ்வார் அவர்களுக்கு மத்திய அரசின் உயரிய விருதான "பாரத ரத்னா" விருதினை வழங்க வேண்டுமென மாநிலத் தலைவர் அவர்கள் முன்மொழிய அதனை சட்டமன்ற குழு தலைவர் அவர்கள் வழிமொழிந்தார்கள்.