கலிங்கியம் ஊராட்சி பகுதியில் கொட்டப்படும் குப்பைகளினால் மிகுந்த சுகாதாரக் கேடு அதிகரிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
July 11, 2022
0
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், கலிங்கியம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட நாகர்பாளையம் ரோட்டில் பாலம் அமைந்துள்ள பகுதியில் அதன் ஓரங்களில் கொட்டப்படும் குப்பைகளினால் மிகுந்த சுகாதாரக் கேடு அதிகரிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
அந்தப் பகுதியில் "அனுமதியின்றி குப்பை மற்றும் இறைச்சிக் கழிவுகளை கொட்ட கூடாது, மீறினால் தண்டிக்கப் படுவீர்" என எச்சரிக்கை பலகை அமைந்துள்ள போதிலும், ஒரு சிலர் அதையும் மீறி கழிவுகளையும், மது பாட்டில்களையும், இறைச்சிக் கழிவுகளையும் இங்கு கொட்டி வருவதால், இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது எனவும் இதனால் தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். ஆகவே சம்பந்தப்பட்ட கலிங்கியம் ஊராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும் எனவும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
Tags