Type Here to Get Search Results !

சித்தோடு பேரூராட்சியில்‌ வேளாண்மை - உழவர்‌ நலத்துறையின்‌ சார்பில்‌ ரூ.38.00 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ புதிதாக கட்டப்பட்டுள்ள துணை வேளாண்மை விரிவாக்க மையத்தினை (விதை சேமிப்பு கிடங்கு) - சு.முத்துசாமி அவர்கள்‌ திறந்து வைத்தார்‌.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ அனைத்து துறைகளின்‌ சார்பில்‌ எண்ணற்ற திட்டங்களை அறிவித்து சிறப்புடன்‌ செயல்படுத்தி வருகிறார்கள்‌. அந்த வகையில்‌ ஈரோடு மாவட்டத்திற்கென பல்வேறு திட்டங்கள்‌ அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாண்புமிகு வீட்டுவசதி மற்றும்‌ நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர்‌ திரு.சு.முத்துசாமி அவர்கள்‌ 30.06.2022 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர்‌ திரு.ஹெச்‌.கிருஷ்ணனுண்ணி இஆப., அவர்கள்‌ தலைமையில்‌, மாண்புமிகு மாநகராட்சி மேயர்‌ திருமதி.சு.நாகரத்தினம்‌, அந்தியூர்‌ சட்டமன்ற உறுப்பினர்கள்‌ திரு.ஏ.ஜி.வெங்கடாசலம்‌ ஆகியோர்‌ முன்னிலையில்‌ ஈரோடு மாவட்டம்‌, பரிமளம்‌ மஹாலில்‌ சமூக பாதுகாப்புத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 1000 பயனாளிகளுக்கு ரூ.1.20 கோடி மதிப்பீட்டில்‌ முதியோர்‌ உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள்‌ உதவித்தொகை மற்றும்‌ இதர உதவித்தொகைகளையும்‌, 34 பயனாளிகளுக்கு ரூ.23,35,050/- மதிப்பிட்டில்‌ இலவச வீட்டுமனை பட்டாக்களையும்‌, கூட்டுறவுத்துறையின்‌ சார்பில்‌ 88 பயனாளிகளுக்கு ரூ.1.22 கோடி மதிப்பீட்டில்‌ முத்ரா கடன்‌, மாற்றுத்திறனாளிகடன்‌, சிறுவணிகக்‌ கடன்‌, சம்பளக்‌ கடன்‌ மற்றும்‌ மகளிர்‌ சுயஉதவிக்குழுக்‌ கடன்‌, பயிர்கடன்‌, நடைமுறை மூலதனக்கடன்‌, கூட்டுப்பொறுப்புக்‌ குழு பயிர்கடன்‌, சுயஉதவிக்குழு கடன்களையும்‌ என மொத்தம்‌ 1122 பயனாளிகளுக்கு ரூ.2.65 கோடி மதிப்பீட்டில்‌ பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்‌.
தொடர்ந்து, சித்தோடு பேரூராட்சியில்‌ வேளாண்மை - உழவர்‌ நலத்துறையின்‌ சார்பில்‌ ரூ.38.00 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ புதிதாக கட்டப்பட்டுள்ள துணை வேளாண்மை விரிவாக்க மையத்தினை (விதை சேமிப்பு கிடங்கு) மாண்புமிகு வீட்டுவசதி மற்றும்‌ நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர்‌ திரு.சு.முத்துசாமி அவர்கள்‌ நேரில் சென்று திறந்து வைத்தார்‌.
இந்நிகழ்ச்சிகளில்‌, மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ திருமதி.ச.சந்தோஷினி சந்திரா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர்‌ திருமதி.கே.நவமணி, ஈரோடு வருவாய்‌ கோட்டாட்சியர்‌ திரு.சதீஷ்குமார்‌, மரியாதைக்குரிய துணை மேயர்‌ திரு.வே.செல்வராஜ்‌, ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்கள்‌ திரு.பிரகாஷ்‌ (ஈரோடு), திருமதி.காயத்திரி இளங்கோ (சென்னிமலை), கூட்டுறவு சங்கங்களின்‌ இணைப்பதிவாளர்‌ திரு.ராஜ்குமார்‌, இணை இயக்குநர்கள்‌ திரு.சின்னசாமி (வேளாண்மை), திரு.பழனிவேல்‌ (கால்நடை பராமரிப்புத்துறை), ஈரோடு வட்டாட்சியர்‌ திரு.பாலசுப்பிரமணி மற்றும்‌ ஈரோடு, சென்னிமலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்‌ உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள்‌, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.