Type Here to Get Search Results !

எடப்பாடி பழனிசாமி மீது புகார் - சட்ட அறிவிப்பினை அனுப்பிய வழக்கறிஞர் சங்கரேஷ் குரு சாமி.....

எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் வழக்கறிஞர் சங்கரேஷ்‌ குரு சாமி புகாரளித்துள்ளார். மேலும் தலைமை கழக அலுவலக முகவரிக்கு சட்ட அறிவிப்பினையும் அனுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தன்னை அஇஅதிமுக வின் ஒரு அடிப்படை அடிமட்ட தொண்டன் என குறிப்பிட்டுள்ளார். மேலும் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் பேரன்பிற்கு பாத்திரமானவர் என்றும், இது கழக நாளேடான டாக்டர் நமது எம் ஜி ஆர் பத்திரிக்கையின் 28.10.2010 ஆம் ஆண்டில் வெளிவந்த நாளேட்டில் தன்னைப் பற்றிய முழு விவரங்களை தனது புகைப்படத்தோடு வெளியிட்டு அனைத்து கழக தொண்டர்கள் மற்றும் தமிழக அனைத்து பொது மக்களுக்கும் வெளிச்சம் போட்டு காட்டியவர் புரட்சித்தலைவி அம்மா என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் இவர் அனுப்பியுள்ள சட்ட அறிவிப்பினில், எடப்பாடி பழனிசாமி யின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். மேலும் இவரது அறிவிப்பில், 11.7.2022 அன்று அனைத்து தன்னார்வ தொண்டர்கள் ஒன்று கூடும் கூட்டம் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் மாளிகை முன்பு நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.