கோபிசெட்டிபாளையம் நாயக்கன்காடு மைதானத்தில் நகர் மன்ற தலைவர் நாகராஜ் புறா பந்தைய போட்டியை துவக்கி வைத்தார்.
July 10, 2022
0
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நாயக்கன்காடு மைதானத்தில் கோபிச்செட்டிப்பாளையம் நகர புறா வளர்ப்போர் சங்கம் சார்பில் 50-ம் ஆண்டு சாதா புறா மற்றும் கர்ணப்புறா பந்தைய கூட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
இப்போட்டி சாதா புறா, கர்ண புறா ஆகிய 2 பிரிவுகளில் நடைபெறுகிறது. இதில் 8-க்கும் மேற்பட்ட புறாக்களின் உரிமையாளர்கள் கலந்துகொண்டு புறாக்களை பறக்க விட்டனர். இப்போட்டியை கோபிசெட்டிபாளையம் நகர் மன்ற தலைவர் என்.ஆர்.நாகராஜ் கலந்துக்கொண்டு துவக்கிவைத்தார். அவருடன் இணைந்து N.ரத்தினசாமி (திருப்பூர்), G.N.முருகேசன் (பாட்கோ ரோடுவேஸ், திருப்பூர்), தம்பான் (எ) சண்முகசுந்தரம் (பண்ணாரி அம்மன் மெஸ், கோபி), கந்தசாமி அப்பன் (ஈரோடு), V. நெடுஞ்செழியன் (கரூர்), S. சந்துரு (CC என்டர்பிரைசஸ், சேலம்), சையத் (ஸ்ட்ரோக் ஆர்ட்ஸ், கோபி) ஆகியோர் இணைந்து போட்டியை துவக்கி கொடுத்தனர்.
மேலும் இந்த போட்டி வரும் மூன்று ஞாயிற்றுக்கிழமை நாட்களில் நடைபெறுகிறது. இதில் எந்த புறா அதிக நேரம் வானில் பறக்கிறதோ, அந்த புறா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். வெற்றி பெறும் புறாக்களுக்கு புள்ளி பட்டியல் அடிப்படையில் முதல் பரிசாக ஒரு கிராம் தங்க நாணயமும், இரண்டாம் பரிசாக ரூ.1600, மூன்றாம் பரிசாக ரூ.1100 என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் புறா மத்தியஸ்தர்களாக G.N. துரைசாமி (ஆட்டோ, பா. நஞ்ச கவுண்டன்பாளையம்), பாலசுப்பிரமணியன், கமலேஷ், தேவராஜ், கனகு (சத்தி), வடிவேல் (சத்தி), சாகுல் அமீது (சத்தி), சதீஸ் (சத்தி), முருகேஷ் (திருப்பூர்) ஆகியோர் பங்கேற்றனர்.