பாரதி ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம்...
July 10, 2022
0
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் 09.07.2022 சனிக்கிழமை வேலூர் மாவட்டம், அரப்பாக்கம், ரமணி சங்கர் மஹாலில் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நடைபெற்ற கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளர்களாக அகில இந்திய இணை பார்வையாளர் திரு. சுதாகர் ரெட்டி அவர்கள், தேசிய மகளிர் அணி தலைவர் திருமதி. வானதி சீனிவாசன் அவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர் திரு. பொன். ராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த நிகழ்வில் மாநிலத் துணைத் தலைவர்கள் திரு. கே. எஸ். நரேந்திரன் அவர்கள் மற்றும் கே.பி. ராமலிங்கம் அவர்கள், மாநில பொதுச் செயலாளர்கள் திருமதி. கார்த்தியாயணி, திரு. கருப்பு முருகானந்தம், திரு. எம்.பாலகணபதி, திரு. ஏ. பி. முருகானந்தம், திரு. ராம சீனிவாசன் அவர்களுடன் சட்டமன்ற உறுப்பினர்களான நாகர்கோவில் தொகுதி திரு. எம். ஆர். காந்தி அவர்கள் மற்றும் மொடக்குறிச்சி தொகுதி டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் கலந்து கொண்டு நடைபெற்ற கூட்டத்தில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கு சிறப்பான முறையில் செயலாற்றக்கூடிய செயல்பாடுகள் பற்றிய கருத்துக்கள் முன் வைக்கப்பட்டும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும் கூட்டம் இனிதே நடைபெற்றது.