சாய்ஸ் பங்குச்சந்தை நிறுவனத்தின் புதிய கிளையை இன்று 13.07.2022 புதன்கிழமை ஈரோடு சக்தி ரோடு, நேரு வீதி, SBT காம்ப்ளக்ஸின் முதல் தளத்தில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் குத்து விளக்கு ஏற்றி துவங்கி வைத்தார்கள்.
மும்பையை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் இந்நிறுவனம் தமிழ்நாட்டில் சென்னை, சேலம், மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் கோயம்புத்தூரை தொடர்ந்து ஈரோட்டிலும் தனது ஏழாவது கிளையை இன்று தொடங்கியது.
இதில் சாய்ஸ் நிறுவனத்தின் மண்டல தலைவர் திரு. ஜோசி ஜான், அலுவலக உறுப்பினர்கள் திரு. ராஜேஷ் மற்றும் கிளை மேலாளர் திரு. மணி ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த சாய்ஸ் நிறுவனமானது பங்கு சந்தையில், சிறந்த முதலீட்டு ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல் சேவைகளை, நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.