இந்துக்களின் உரிமையை மீட்க பிரச்சாரப் பயணம் ...
July 17, 2022
0
ஈரோடு மேற்கு மாவட்ட இந்துமுன்னணியின் சார்பாக கோபிசெட்டிப்பாளையத்தில் இந்துக்களின் உரிமையை மீட்க பிரச்சாரப் பயணமானது கோபி தினசரி மார்க்கெட் அருகே சிவன், பார்வதி, பத்ரகாளி, கருப்பண்ணசாமி வேடமிட்டவர்கள் நடனம், தேவராட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகளுடன்
இந்துக்களின் பாதுகாவலர், இந்துமுன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்களுக்கு ஓதுவார்கள் ஓத பூரணகும்ப மரியாதை கொடுக்கப்பட்டு துவங்கியது. அங்கிருந்து பேரணியாக சென்று கச்சேரிமேட்டில் அமைக்கப்பட்ட பொதுக்கூட்ட மேடையில் பொதுக்கூட்டமானது கடவுள் வாழ்த்துடன் தொடங்கியது. மாவட்டதலைவர் குருசாமி அவர்கள் தலைமையில், மாவட்ட பொதுசெயலாளர் P.B.ஸ்ரீதர் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்டதுணைத்தலைவர்கள் கிருஷ்ணசாமி வரவேற்புரையும், குமார் துவக்கவுரையும் ஆற்றினர்.
மாநில செயலாளர் V.S.செந்தில்குமார், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் கிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையும், இந்துமுன்னணி மாநில தலைவர் இந்துக்களின் பாதுகாவலர் காடேஸ்வரா.சி.சுப்பிரமணியம் அவர்கள் எழுச்சியுரையும் ஆற்றினர்.
இதில் மாநில அமைப்பாளர் பக்தன், இணைஅமைப்பாளர் ராஜேஷ், மாநிலபொதுசெயலாளர் கிஷோர்குமார், மாநில செயலாளர்கள் சண்முகம், சேவுகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட துணைத்தலைவர் செல்வராஜ் நன்றியுரை ஆற்றினார்.
பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை மாவட்ட செயலாளர் K.S.ஸ்ரீபாலமுருகன் ஒருங்கிணைத்தார்.
இதில் மாவட்ட பொருளாளர் சுரேஷ், மாவட்டத்துணைத்தலைவர்கள் குறிஞ்சி சேகர், மாரிமுத்து, மாவட்ட செயலாளர்கள் கேசவன்,
மாவட்ட செயலாளர்கள் நாகராஜ், சிவக்குமார்
மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பிரபாகரன், தனுஷ், கார்த்தி, தமிழ்செல்வன், மணிகண்டபிரபு, செந்தில் மற்றும் நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் பொதுமக்கள் உட்பட சுமார் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன. இறுதியாக நகர பொதுச்செயலாளர் சுப்பிரமணி சாந்தி மந்திரம் பாடினார்.