சிவகிரி சின்னியம்பாளையத்தில் மக்கள் மருந்தகம் மற்றும் மருத்துவமனை துவக்க விழா...
July 18, 2022
0
14.07.2022 வியாழக்கிழமை மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட கொடுமுடி வட்டம், சிவகிரி சின்னியம்பாளையத்தில் உள்ள அலுவலகத்தில் பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் சிறப்பான திட்டங்களில் ஒன்றான குறைவான கட்டணத்தில் மருந்துகள் கிடைக்கும் மக்கள் மருந்தகம் மற்றும் குறைவான கட்டணத்தில் மருத்துவம் பார்க்கும் மருத்துவமனை வசதி ஆகியவை மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்களால் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைக்கப்பட்டது.
நடைபெற்ற நிகழ்வில் பாரதி ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் என். பி. பழனிச்சாமி, மாவட்ட பொதுச் செயலாளர்கள் வேதானந்தம், ஈஸ்வரமூர்த்தி, கொடுமுடி மேற்கு ஒன்றிய தலைவர் செந்தில்குமார், முன்னாள் ஒன்றிய தலைவர் முருகானந்தம், கிழக்கு ஒன்றிய தலைவர் கார்த்திகேயன், முன்னாள் ஒன்றிய தலைவர் கிளாம்பாடி சேகர், பொதுச் செயலாளர் அருள், மேற்கு மண்டல பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன், கார்த்தி, ஒன்றிய இளைஞர் அணி தலைவர் மகேந்திரன்,
மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் யுவராஜ், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் அருள் பிரகாஷ், மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட விவசாய அணி செயலாளர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய விவசாய அணி தலைவர் ரமேஷ் பொன்வேல், ஒன்றிய மகளிர் அணி தலைவர் சுகுணா, ஒன்றிய துணைத் தலைவர் கலைவாணி, மாவட்ட அரசு தொடர்பு செயலாளர் மோகன்ராஜ், தணிகாசலம், குழந்தைவேலு, நமச்சிவாயம், விஸ்வநாதன், கொரடா சங்கர், நாச்சிமுத்து, ஆனந்த் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.