டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் தலைமையில் வடிகால் மற்றும் பேவர் பிளாக் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.
July 07, 2022
0
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதி, கொடுமுடி வட்டம், சிவகிரி பேரூராட்சிக்குட்பட்ட 14 வது வார்டு மாரப்பம்பாளையம், நாடார் காலனி பகுதியில் வடிகால் மற்றும் ஃபேவர் பிளாக் சாலை அமைக்க சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் அமைய உள்ள சாலைக்கு 06.07.2022 புதன்கிழமை மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் தலைமையில் பூமி பூஜையானது நடைபெற்றது.
நடைபெற்ற நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் எஸ். டி. செந்தில்குமார், கொடுமுடி மேற்க்கு ஒன்றிய தலைவர் செந்தில்குமார், முன்னாள் ஒன்றிய தலைவர் முருகானந்தம், கொடுமுடி ஒன்றிய பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன், விவசாய அணி ஒன்றிய தலைவர் ரமேஷ் பொன்வேல், இரண்டாவது வார்டு கவுன்சிலர் கார்த்தி, இளைஞர் அணி மாவட்ட தலைவர் கவின், ஊடக பிரிவு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், கல்வியாளர் பிரிவு முன்னாள் செயலாளர் மோகன்ராஜ், கொடுமுடி ஒன்றிய துணைத் தலைவர் கலைவாணி, முன்னாள் கவுன்சிலர் நாச்சிமுத்து, பி. பழனிசாமி, பரமசிவம், சண்முகம் (எ) பழனிச்சாமி,
அஇஅதிமுக முன்னாள் பேரூர் தலைவர் பரமு (எ) ஆறுமுகம், 14வது வார்டு கவுன்சிலர் சுமதி ராமசாமி, சுரேந்தர், சோமசுந்தரம், எஸ். கே. சதாசிவம், கனகசபாபதி, சண்முகம், வைரவேல், பழனிச்சாமி, கங்காதரன், சண்முகராசு, கோபால், கணபதி, சக்திவேல், ரூபேஷ், சுப்பிரமணியம்,வலசு மணி லேத் செல்வகுமார், சிவகிரி பேரூராட்சி செயல் அலுவலர், பொறியாளர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.