பா.வெள்ளாளபாளையம் எஸ்.பி நகரில் அமைந்துள்ள இல்லம் தேடி கல்வி மையத்தினை மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி அவர்கள் பார்வையிட்டார்.
July 06, 2022
0
கோபி கல்வி மாவட்டம் பா.வெள்ளாளபாளையம் எஸ்.பி நகரில் அமைந்துள்ள இல்லம் தேடி கல்வி மையத்தினை மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி I.A.S., அவர்கள் இன்று பார்வையிட்டார்.
அது சமயம் ஈரோடு மாவட்ட திட்ட அலுவலகத்தில் இருந்து ADPC வேல்முருகன் அய்யா அவர்களும், மதிப்பிற்குரிய ஒருங்கிணைப்பாளர் சிவராமன் ஐயா அவர்களும், மதிப்பிற்குரிய நந்தினி அவர்களும் கலந்து கொண்டனர். இல்லம் தேடிக் கல்வி அனைத்து பகுதிகளிலும் தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை மாணாக்கர்களுக்கு தன்னார்வலர்கள் மூலமாக அவர்களின் செயல் திறனை மேம்படுத்தும் பொருட்டு மன மகிழ்ச்சி மற்றும் கற்றல் செயல்பாடுகள் வடிவமைக்கப்பட்டு, அது சார் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது மாணவர்களுக்கு சிறப்பான திட்டமாக தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட இல்லம் தேடி கல்வித் திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதால்
மாவட்ட ஆட்சியர் அவர்கள் இல்லம் தேடி கல்வி மையங்களை பார்வையிட்டு வருகிறார்.
மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்கள் தன்னார்வலர் மா.மனிஷா அவர்களின் ஓரிகாமி வகுப்பினை உற்று நோக்கினார். மேலும் பனைமரம் குறித்து பாடலை அருகிலுள்ள முத்து காளிமடை மையத்தைச் சார்ந்த தன்னார்வலர்கள் மற்றும் மாணாக்கர்கள் பாடி மகிழ்ந்தனர்.
மாணவர்களுக்கான மன மகிழ்வு விளையாட்டுகளும் நடைபெற்றது. மாணவர்களின் மகிழ்ச்சியான செயல்பாடுகளை கண்டு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பாராட்டினார். CSO மாரிமுத்து அவர்கள் மையம் சார்ந்த பல்வேறு நிகழ்வுகளை விளக்கி கூறினார்.
இதில் வட்டார வளமைத்தைச் சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தனர்.