புதிய கான்கிரீட் பாதை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி - என்.நல்லசிவம் அவர்கள் துவக்கி வைத்தார்.
July 07, 2022
0
ஈரோடு வடக்கு மாவட்ட திமுக அம்மாபேட்டை, வடக்கு ஒன்றிய கண்ணப்பள்ளி கிராமம், ஆணைக்கவுண்டனூர் பகுதியில் புதிய கான்கிரீட் பாதை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியை ஒன்றிய கழகச் செயலாளர் கே.எஸ்.சரவணன், சுப்பிரமணியம் மற்றும் கண்ணப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.வெள்ளையம்மாள் அய்யாதுரை அகியோர்களின் முன்னிலையில் மாவட்ட கழகச் செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள் துவக்கி வைத்தார்.
அதேபோல ஈரோடு வடக்கு மாவட்ட திமுக அம்மாபேட்டை தெற்கு ஒன்றியத்தில், மாணிக்கம்பாளையம் ஊராட்சியில், செட்டிகாரச்சி மேடு பகுதியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நிதியிலிருந்து காண்கிரிட் வீதி அமைக்கும் பணியை ஒன்றிய பொறுப்பாளர் எம்.மணி (எ) ஈஸ்வரன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஜெ.சதாசிவம் முன்னிலையில் மாவட்ட கழக செயலாளர் பண்பாளர் என்.நல்லசிவம் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, கிளை கழக நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags