Type Here to Get Search Results !

அந்தியூரில் அரசு கலைக் கல்லூரி - முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்றத் தொகுதிக்கு புதிய அரசு மற்றும் கலைக் கல்லூரி தொடங்கப்படும் என கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரின் போது தமிழக உயர்வு கல்வித்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி அந்தியூரில் தற்போது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அரசு கலைக் கல்லூரி தொடங்கப்பட உள்ளது.
இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் கிருஷ்ணனுண்ணி, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம், உயர்கல்வித்துறை மண்டல இணை இயக்குனர் உலகி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி சிறப்பித்தனர்.
இதில், கோபி கோட்டாட்சியர் திவ்யதர்ஷினி, அந்தியூர் வட்டாட்சியர் விஜயகுமார், கல்லூரி முதல்வர் சுமதி ,வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், மாவட்ட கவுன்சிலர் நவமணி கந்தசாமி மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். இந்த புதிய கலை கல்லூரி திறப்பு காரணமாக சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் பயன் அடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.