நந்தா கல்லூரி மற்றும் மருத்துவமனையின் சார்பில் இலவச பரிசோதனை மற்றும் மருத்துவ முகாம்...
July 06, 2022
0
மருத்துவர்கள் தினத்தனை முன்னிட்டு
நந்தா ஆயுர்வேதா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையும், ஈரோடு கு.'.பீக்
ஹெல்த் கேரும் இணைந்து எலும்பில் தாது பொருட்களின் அடர்த்தி குறைபாடு
பரிசோதனை மற்றும் மருத்துவ முகாம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில்
நடைப்பெற்றது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஹெச். கிருஷ்ணணுன்னி சிறப்பு விருந்தினராக
கலந்துக் கொண்ட இம்முகாமிற்கு ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் வி.
சண்முகன் தலைமை தாங்கினார்.
இவர்களுடன் ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் செயலர் எஸ். நந்தகுமார்
பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ். திருமூர்த்தி, முதன்மை நிர்வாக
அதிகாரி முனைவர் எஸ். ஆறுமுகம், முதன்மை நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி
மற்றும் இந்திய மருத்துவ கல்லூரிகளின் நிர்வாக அலுவலர் அப்பலோஜேம்ஸ்
ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
முன்னதாக நந்தா ஆயுர்வேதா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின்
முதல்வர் மருத்துவர். M.கிருத்திகா முகாமில் கலந்துக் கொண்ட ஆட்சியர் அலுவலகத்தில்
பணிபுரியும் அனைத்து அதிகாரிகளையும் மற்றும் சக ஊழியர்களையும் வரவேற்று
பேசினார்.
இம்முகாமில் எலும்பிலுள்ள தாது பொருட்களின் அடர்த்தியினை கண்டறிந்து
அதற்கேற்ப மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன. குறிப்பாக 35 வயது நிரம்பிய
பெண்களுக்கும், 40 வயது நிரம்பிய ஆண்களுக்கும், நீண்ட நாட்களாக குறிப்பிட்ட
மருந்துகளை உட்கொள்பவர்களுக்கும், முதுகு வலி மற்றும் மூட்டூ வலி
கொண்டவர்களுக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் தோல்நோய்கள், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம்,
அஜீரணகோளாறுகள், ஆஸ்துமா மற்றும் சுவாச கோளாறுகள், பக்கவாதம், குடல்புண்,
உடல் புருமன், தைராய்டு கோளாறுகள போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆயுர்வேதா
மருத்துவத்தில் 10 க்கும் மேற்பட்ட மருத்துவர்களின் ஆலோசனையின் படி இலவச
சிகிச்சை அளிக்கப்பட்டது.
இம்முகாமில் சுமார் 270 க்கும் மேற்பட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபரியும்
அனைத்து அதிகாரிகளும் மற்றும் சக ஊழியர்களும் கலந்து கொண்டு இலவச
சிகிச்சைகள் பெற்று பயன் அடைந்தார்கள்.