பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன உண்ணாவிரத அறப்போராட்டம்...
July 06, 2022
0
திமுக அரசை கண்டித்து மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை அவர்களின் அறிவுரைத்தலின்படி ஈரோடு தெற்கு மாவட்ட பாரதி ஜனதா கட்சி சார்பில் 05.07.2022 செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. தெற்கு மாவட்ட தலைவர் எஸ். டி. செந்தில்குமார் தலைமையில் நடந்த இந்த உண்ணாவிரத அறப்போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தெற்கு மாவட்ட பார்வையாளர் பாயிண்ட் மணி மற்றும் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் கலந்து கொண்டனர்.இதில் முன்னாள் எம்.பி. சவுந்தரம், மகளிர் அணி மாநில பொது செயலாளர் மோகனப்பிரியா, மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேஷ்குமார், பொது செயலாளர்கள் எஸ்.எம்.செந்தில், வேதானந்தம், சிவகாமி மகேஷ்வரன், ஈஸ்வரமூர்த்தி, மகளிர் அணி தலைவர் புனிதம், மாவட்ட துணை தலைவர்கள் குணசேகரன், சின்னதுரை, தங்கராஜ், வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் ஈஸ்வரமூர்த்தி, தொழில் பிரிவு மாவட்ட தலைவர் கார்த்திக், செயலாளர் பாலமுரளி, பட்டியல் அணி மாநில துணை செயலாளர் அய்யாசாமி, கலை இலக்கிய பிரிவு தலைவர் சக்திசுப்பிரமணி, மத்திய அரசாங்க மக்கள் நலதிட்டங்கள் பிரிவு மாவட்ட தலைவர் பி.எஸ்.செல்வமணி, முன்னாள் வர்த்தக அணி நிர்வாகிகள் செல்வகுமார், தீபம்ராஜா, அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு தலைவர் சரவணன், துனை தலைவர் ரவிந்தரன், மாவட்ட செயலாளர் குமரகுரு, இந்திரகுமார், ஊடக பிரிவு அண்ணாதுரை உள்பட பா.ஜ.க. பல்வேறு பிரிவுகளின் நிர்வாகிகள் திரளாக உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.