கோபிசெட்டிபாளையத்தில் புறா கலை போட்டி ...
July 06, 2022
0
மறைந்த முன்னாள் புறா கலைஞர்களின் நினைவாக கோபி புறா கலை நண்பர்கள் (Gobi friends pigeon tournament GFPT) நடத்திய 50 ஆம் ஆண்டு பொன்விழா கண்ட புறா கலை போட்டி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்றது. பந்தயத்திற்கு மட்டுமின்றி முன் காலத்தில் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு பல நூறு கிலோமீட்டர் தூரம் பறந்து ரகசியமாக தகவல் பரிமாற்றத்திற்கு புறாக்கள் பயன்படுத்தப்பட்டன. இன்றளவும் சிறந்த தகவல் தொடர்பில் புறாக்கள் பயன்படுத்தப்படும் வேளையில் உரிய நேரத்தில் குறிப்பிட்ட இலக்கை அடையும் புறாக்களை வைத்து 50 ஆண்டுகளாக கோபியில் பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக கோபிசெட்டிபாளையம், அளுக்குளி, புளியம்பட்டி, நம்பியூர், கூகலூர், வஞ்சமலை வாய்க்கால், ஈரோடு நல்ல கவுண்டன் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 24 பந்தய புறாக்கள் பங்கேற்றன. 7 மணிக்கு தொடங்கிய பந்தயத்தில் கடைசியாக தரையிறங்கும் நான்கு புறாக்களுக்கு பரிசு வழங்கப்படும். ஒவ்வொரு வாரமும் முதல் பரிசாக ஒரு கிராம் தங்கமும், இரண்டாம் பரிசாக ரூ.3525, மூன்றாம் பரிசாக ரூ.2525-ம், நான்காம் பரிசாக ரூ.1515 வழங்கப்படும்.
மேலும் இதனைத் தொடர்ந்து ஆறு வாரங்களுக்கு நடைபெறும் போட்டியில் இறுதியாக அதிக நேரம் பறந்து, அதிக புள்ளிகளை பெறும் புறாவிற்க்கு சிறப்பு பரிசு மற்றும் கோப்பை வழங்கப்படும்.
இந்நிகழ்ச்சியை போட்டி அமைப்பாளர் K.A .நஞ்சப்பன், ஆலோசகர் P.R .வெங்கிடுசாமி, பொருளாளர் M. சுரேஷ் M.Com., D.Cop., B.L.I.S., செயலாளர் V.கலையரசு D.T.T., ஒருங்கிணைப்பாளர் B. தியாகு, புறா கலை ஆர்வலர் S.R. நந்தன் D.T.Ed., M.A., M.Ed., ஆகியோர் ஒன்றிணைந்து சிறப்பாக நடத்தினர்
Tags