Type Here to Get Search Results !

ஈரோட்டில் இருந்து கிளம்பிய திருச்சி பாசஞ்சருக்கு ஈரோடு காங்கிரஸ் சார்பாக இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பாக ஈரோடு ரயில் நிலையத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக ஈரோட்டில் இருந்து திருச்சிக்கு பேசஞ்சர் ரயில் இயக்கப்படவில்லை. இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சர், தமிழக முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற & சட்டமன்ற உறுப்பினர்கள், ரயில்வே உயர் அதிகாரிகள் ஆகியோருக்கு காங்கிரஸ் கட்சி சார்பாக கோரிக்கை மற்றும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் செய்ததன் விளைவாக 9.7.2022 காலை 8 மணிக்கு ஈரோட்டில் இருந்து திருச்சிக்கு புதிய பேசஞ்சர் ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்து அதன் தொடக்க விழாவாக ஈரோடு ரயில் நிலையத்தில் காங்கிரசார் சார்பில் ரயில் இன்ஜினுக்கு மாலை அணிவித்து பூஜைகள் செய்து பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கி சிறப்பாக வழி அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத் தலைவர் கே என்.பாஷா தலைமையில், ஈரோடு மாநகர் மாவட்டஊடகப்பிரிவு தலைவர் ம.முகமது அர்சத் முன்னிலையில், ஈரோடு மாநகர் மாவட்ட நெசவாளர் அணி காங்கிரஸ் தலைவர் சி.மாரிமுத்து பூஜைகளை செய்து, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் டி.திருசெல்வம் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார். மொடக்குறிச்சி முன்னாள் வட்டார தலைவர் வி கே.செந்தில் ராஜா, மாவட்ட பொது செயலாளர்களான எம் ஆர் அரவிந்தராஜ், இரா. கனகராஜ், ஏ. அன்பழகன், துணைத் தலைவர் பாஸ்கர் ராஜ், சேவாதவள மாநகர் மாவட்ட தலைவர் எஸ்.முகமது யூசுப், தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் சி எம். ராஜேந்திரன், முன்னாள் நகர தலைவர் குப்பண்ணா சந்துரு, மாவட்ட நிர்வாகிகளான கே.ஜே.டிட்டோ, சதீஷ், வீரப்பன்சத்திரம் நிர்வாகி சண்முகம், என் சி டபிள்யூ சி என்கிற தேசிய காங்கிரஸ் தொழிலாளர்கள் அமைப்பின் ஈரோடு மாநர் மாவட்ட தலைவர் ஆர் கிருஷ்ணவேணி, மகிளா காங்கிரஸ் பேபி மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டு ரயிலை வாழ்த்தி அனுப்பி வைத்தார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.