
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் ஆர்ப்பாட்டம்
August 09, 2022
0
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் அதன் ஈரோடு மாவட்ட மருத்துவர்கள் 08.08.2022 நேற்று ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் ஈரோடு மாவட்ட தலைவர் டாக்டர் சீனிவாசன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அதன் கௌரவத் தலைவர் ரவிச்சந்திர பிரபு முன்னிலை வகித்தார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு பணி நேரத்தை நீட்டிப்பு அரசாணையை திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் சங்க மாவட்ட செயலாளர் ஜெ. கோகுலகிருஷ்ணன் மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags