Type Here to Get Search Results !

ஈரோடு ஜெ.சி.ஐ. மற்றும் கே.எஸ்.ரங்கசாமி தொழில் நுட்ப கல்லூரி சார்பில் ஈரோட்டில் நடந்த மாரத்தான் போட்டியில் 1,300 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்

ஈரோடு ஜெ.சி.ஐ. மற்றும் கே.எஸ்.ரங்கசாமி தொழில் நுட்ப கல்லூரி சார்பில் ஈரோட்டில் போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது. இந்த போட்டிக்கு ஜெ.சி.ஐ. தலைவர் பிரேம்சரண் தலைமை தாங்கினார். திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் நாகரத்தினம், மாவட்ட வனஅதிகாரி கவுதம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடி அசைத்து மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார். ஆண்கள், பெண்களுக்கு 10 கிலோ மீட்டர் மற்றும் 5 கிலோ மீட்டர் என இரு பிரிவுகளில் மாரத்தான் போட்டி நடந்தது. மேலும் குழந்தைகளுக்கு 1/4 கிலோ மீட்டர் பிரிவிலும் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 1,300-க்கும் மேற்பட்ட வீரர் -வீராங்கனைகள் கலந்து கொண்டு இலக்கை நோக்கி வேகமாக ஓடினார்கள். 
5 கிலோ மீட்டர் தூரம், ஈரோடு வ.உ.சி. பூங்காவில் தொடங்கி நரிக்கல் மேடு, வீரப்பன்சத்திரம் வழியாக மீண்டும் வ.உசி. பூங்காவில் முடிவடைந்தது.  இதேபோல் 10 கிலோ மீட்டர் தூரம் வ.உ.சி. பூங்காவில் தொடங்கி பி.பி.அக்ரஹாரம், கனிராவுத்தர்குளம் வழியாக மீண்டும் வ.உ.சி. பூங்காவில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து வெற்றிபெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கப்பட்டன. இதில் மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ்,  ஜெ.சி.ஐ. துணைத்தலைவர் அபிஷேக், கே.எஸ்.ரங்கசாமி தொழில் நுட்ப கல்லூரி முதல்வர் ஆர். கோபாலகிருஷ்ணன், துணை முதல்வர் கார்த்திகேயன்,  முதன்மை கல்வி அதிகாரி தியாகராஜா, பேராசிரியர் மோகன், உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.