ஈரோடு மாநகராட்சி வார்டு 11க்கு உட்பட்ட மாணிக்க பாளையம் ஹவுசிங் யூனிட்டில் மழை காரணமாக பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சில வீடுகளில் தண்ணீர் புகுந்த காரணத்தால் உடனடியாக அந்த பகுதிக்கு மாவட்டக் கழக செயலாளரும் தமிழக வீட்டு வசதி துறை அமைச்சருமான மாண்புமிகு திரு. சு. முத்துசாமி அவர்கள் அந்தப் பகுதியில் ஆய்வு செய்தார்.

நிலைமையை சீர் செய்ய உடனடியாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் பொதுமக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்கினார்.
உடன் ஈரோடு மாநகரக் கழகச் செயலாளர் திரு. மு.சுப்பிரமணியம் அவர்கள், பெரிய சேமூர் பகுதிகழகச் செயலாளரும் ஈரோடு மாநகராட்சியின் மரியாதைக்குரிய துணை மேயர் திரு. வி. செல்வராஜ் அவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், மாநகராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்