கோபிச்செட்டிபாளையம் மொடச்சூர் சுப்பு நகரில் அமைந்துள்ள பூங்காவில் உள்ள மங்கல விநாயகர் பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. அதில் முன்னாள் அமைச்சரும் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான கே. ஏ. செங்கோட்டையன் அவர்கள் கலந்துகொண்டார். அவருக்கு பரிவட்டம் கட்டி, மாலை அணிவித்து கௌரவித்தனர். இந்த விழாவில் சுமார் 500க்கும் மேற்பட்ட மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் அதிமுக மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன், மாணவர் அணிச் செயலாளர் கலிங்கியம் அருள் ராமச்சந்திரா, நகரச் செயலாளர் கணேஷ், வார்டு செயலாளர் விஜயகுமார் உட்பட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொதுமக்கள், பூங்கா நண்பர்கள், சங்க உறுப்பினர்கள், தலைவர் ஆர். குணசேகரன், செயலாளர் சரவணமூர்த்தி, பொருளாளர் வெள்ளிங்கிரி, விழாக்குழு தலைவர் ஆறுமுகம், விழாக்குழு செயலாளர் கணேஷ், விழாக்குழு பொருளாளர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
மொடச்சூர் சுப்பு நகரில் மங்கல விநாயகர் பெருமாள் கும்பாபிஷேக விழா - கே. ஏ. செங்கோட்டையன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
August 31, 2022
0