கோபிசெட்டிபாளையம் அருகே 12 திட்டப்பணிகளுக்கான பூமி பூஜை நடைப்பெற்றது.
August 02, 2022
0
கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 12 இடங்களில் மழைநீர் வடிகால் மற்றும் சிறு பாலம் கட்டுவதற்கா முன்னாள் அமைச்சருமான கோபி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜை நடத்தினார்.
கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் உள்ள குப்பாண்டர் வீதி, கிருஷ்ணன் வீதி, ஜெ.ஜெ.நகர், சேரன் நகர் உள்ளிட்ட 12 இடங்களில் சுமார் 34. இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால், சிறு பாலங்கள் அமைத்தல், சிமெண்ட் தளம் அமைத்தல், சேரன் நகர் பூங்காவிற்கு சுற்றுச்சுவர் அமைத்தல் மற்றும் விநாயகர் சன்னதியில் ஆர்.சி அமைத்தல், உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளுக்கான பூமி பூஜை முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.செங்கோட்டையன் துவக்கிவைத்தார்.
இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சத்தியபாமா, மாவட்ட பொருளாளர் கந்தவேல் முருகன், கோபி ஒன்றிய பெருந்தலைவர் மௌலீஸ்வரன், நகரச் செயலாளர் பிரினியோ கணேஷ், கவுன்சிலர் தனசேகரன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். (Image Gallery)