Type Here to Get Search Results !

கலிங்கியம் ஊராட்சியின் கிராம சபை கூட்டம் 15.8.2022 இன்று கலிங்கியம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியம் கலிங்கியம் ஊராட்சியின் கிராம சபை கூட்டம் 15.8.2022 இன்று காலை கலிங்கியம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில் கலிங்கியம் ஊராட்சி தலைவர் T. கோகிலா அருள் ராமச்சந்திரா அவர்கள், உப தலைவர், கலிங்கியத்தை சேர்ந்த கைலாஷ், அவ்வையார் பாளையத்தை சேர்ந்த டாக்டர் ஏ எம் காளீஸ்வரன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல் குறித்து விவாதித்தல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தியை தடை செய்தல் பற்றிய விவாதித்தல், அனைத்து சுகாதாரம் பற்றி விவாதித்தல், திட்டங்கள் மற்றும் நிதிக்குழு மானிய நிதியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் பற்றி விவாதித்தல் ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், நீர்வழிப் பாதை மற்றும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றுதல் குறித்து விவாதித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் பற்றி விவாதித்தல், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் 2010 மறு கணக்கெடுப்புகள் குறித்து விவாதித்தல், ஜீவன் திட்டம் குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் குறித்து விவாதித்தல், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் குறித்து விவாதித்தல், பொறுப்பு துறைகள் பற்றி விவாதித்தல், ஊராட்சி மன்ற தலைவரால் கொண்டுவரப்படும் இதர பொருட்கள் குறித்து விவாதித்தல், மக்கள் நிலை ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட இலக்கு மக்கள் பட்டியலில் உள்ள ஏழை மிகவும் ஏழை நலிவுற்றோர்கள் சேர்த்தல் மற்றும் நீக்குதல் பற்றி விவாதித்தல், பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா திட்டம் பற்றி விவாதித்தல், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டம் பற்றி விவாதித்தல், வறுமை குறைப்பு திட்டம் பற்றி விவாதித்தல், இளைஞர் திறன் திருவிழா பற்றி விவாதித்தல், ஊராட்சிகளுக்கான கட்டணங்கள் இணையவழி செலுத்துதல் பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை பற்றி விவாதித்தல் போன்றவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கிராம சபை கூட்டத்தில் சென்னியப்பா நகர் பகுதி மக்கள் சார்பாக மனு கொடுக்கப்பட்டது. அதில் குடியிருப்பு பகுதிகளுக்குள் தேங்கும் மழை நீர் வெளியேற வடிகால் வசதி சரிவர இல்லை என்றும் போதுமான சாக்கடை வடிகால் வசதி அமைத்துதர வேண்டியும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை பெற்றுக் கொண்ட கோகிலா அருள் ராமச்சந்திரா அவர்கள் விரைவில் சரி செய்து தருவதாக உறுதியளித்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.