50 ஆம் ஆண்டு பொன்விழா (பெருவிழா) கண்ட கோபி புறா கலை (GFPT 2022) போட்டிகளின் பரிசளிப்பு விழா 14.08.2022 ஞாயிறு மதியம் 1.00 மணியளவில் பச்சைமலை அடிவாரம் கோட்டை முனியப்பன் சாமி ஆலயத்தில் விமரிசையாக நடைபெற்றது.
அதில் கோபி நகரமன்ற தலைவர் N. R. நாகராஜ், மக்கள் தொண்டன் தம்பா சண்முகசுந்தரம், ஈரோடு கந்தசாமி, பாட்கோ முருகேசன், Our vigilance council of India (Human Rights Cell)ன் ஜெனரல் செகரட்ரி டாக்டர். A.M. காளிஸ்வரன், Our vigilance council of India (Human Rights Cell)ன் மாவட்ட தலைவர் டாக்டர். N. சிவகுமார் ஆகியோர் முக்கிய விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இதில் 180 க்கும் மேற்பட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த புறா கலை முன்னோடிகள் கலந்து கொண்டு விழா அரங்கை சிறப்பித்தனர்.
விழாவிற்கு வந்தவர்களை கோபி புறா கலை GFPT போட்டிகளின் பொறுப்பாளர்கள் நெஞ்சார வரவேற்று அசைவ விருந்தளித்தனர்.
பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசாக 5 தங்கக்காசுகள், ரூ.55,000 ரொக்கப்பரிசுகள், 34 கோப்பைகள், 31 சான்றிதழ்கள், 14 கிஃப்ட் பொருட்கள் மற்றும் 50 க்கும் மேற்பட்ட புறா கலை வித்தகர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பேராதரவையும், நன்கொடையும் அளித்த நல்லுள்ளங்களுக்கு விழா குழுவினர் சார்பாக நந்து D.T.Ed., M.A., M.Ed., நன்றி தெரிவித்தார்.
புள்ளிகள் பட்டியலில் 18100 புள்ளிகளை பெற்று முதலிடம் பெற்று தொடர்நாயகன் கோப்பையை சின்னச்சாமி அவர்களும், இரண்டாமிடத்தை சுரேஷ் 16059 புள்ளிகளுடனும், மூன்றாமிடத்தை தியாகு 13912 புள்ளிகளுடனும், நான்காமிடமத்தை கலையரசு 13360 புள்ளிகளுடனும்
வெற்றிபெற்றனர். Dr. காளீஸ்வரன், மக்கள் தொண்டன் தம்பா சண்முகசுந்தரம், பாட்கோ முருகேசன், ஈரோடு கந்தசாமி அவர்கள் ஆகியோர் கோப்பைகளை வழங்கினர்.
சாதா இரட்டை புறா போட்டிகளில் 2 தங்கக்காசுகள் வென்ற V. கலையரசுவிற்கு கோபி தி. மு. க. நகர கழக செயலாளர் மற்றும் நகர்மன்ற தலைவர் N. R. நாகராஜ் அவர்கள் வெற்றி கோப்பை மற்றும் 2 தங்கக் காசுகளை பரிசாக வழங்கினார்.