பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அதன் சிறுபான்மை அணி தலைவர் மைக்கேல் அவர்கள் தலைமையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
August 16, 2022
0
ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அதன் சிறுபான்மை அணி தலைவர் மைக்கேல் அவர்கள் தலைமையில் நேற்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
பாரதிய ஜனதா கட்சி என்பது சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்று பொய் பரப்புரை செய்து வருகிறார்கள். அப்படி பொய் உரைப்பவர்களுக்கு பதில் அளிக்க கூடிய வகையில் ஈரோடு தெற்கு மாவட்ட சிறுபான்மை அணி சார்ந்த முன்னாள் சிறுபான்மை அணி தலைவர் கலிபுல்லா, மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் மைக்கேல், மாவட்ட சிறுபான்மை அணி துணை தலைவர் காஜாரஷித்கான்,
மாவட்ட சிறுபான்மை அணி பொருளாளர் பிரவின் குமார், மாவட்ட சிறுபான்மை அணி பொதுச் செயலாளர் மணிகண்டன், ஐ. டி டேட்டா மேனேஜ்மென்ட் மாநில துணை தலைவர் A.N.T. செந்தில், மாவட்ட ஊடகத்துறை பிரிவு தலைவர் அண்ணாதுரை மற்றும் கட்சி உறுப்பினர்கள் இந்த பத்திரிகை நிருபர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சிறுபான்மை அணி தலைவர் மைக்கேல் கூறுகையில் -
பா.ஜ.க.வில் கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் கூட்டம் கூட்டமாக இணைந்து வருவதாக எங்கள் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் மருத்துவர் டெய்சி சரண் அவர்கள் தெரிவித்து உள்ளார். பா.ஜ.க. தமிழகத்தில் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அதேதான் கடந்த எட்டு ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல சாதனைகள் செய்து இந்தியாவை வளர்ச்சி பாதையில் வல்லரசு நாடாக மாற்றும் வகையில் சாதனை படைத்திருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி குறித்து தி.மு.க. பொய்யான மூளை சலவை செய்து வருகிறது. இதை களைய சிறுபான்மை அணி முக்கிய பங்காற்றி வருகிறது. சிறுபான்மை மற்றும் பழங்குடியினரை மையமாக கொண்ட பல நலத்திட்டங்களை முன்னிலை படுத்தி வருகிறது பா.ஜ.க. .
மத்தியில் தி.மு.க. ஆதரவுடன் காங்கிரல் தலைமையலான கூட்டணி ஆட்சி இருந்த போது தமிழகத்தில் 7 பேர் அமைச்சர்களாக பதவி வகித்தனர். அதில் ஒருவர் கூட கிறிஸ்தவர் இல்லை. ஆனால் கேரளாவில் M.P. இல்லாத போதும் ஒரு கிருஸ்தவர் மத்திய அமைச்சர் ஆக்கினார் பாரத பிரதமர் மோடி. வடகிழக்கு மாநிலங்களான கோவா போன்ற மாநிலங்களில் பா.ஜ.க. வில் கிறிஸ்தவர்கள் பலர்
எம்.எல்.ஏ வாக, அமைச்சர்களாக இருக்கிறார்கள். இதன் மூலம் பா.ஜ.க கட்சி சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்பது பொய் பிரச்சாரம் என்பதை சிறுபான்மையினர் தெளிவாக உணர்த்து உள்ளனர் என தெரிவித்தார்.