ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 29 நபர்களுக்கு SP சசிமோகன் அவர்கள் பணி நியமன ஆணை வழங்கினார்...
August 29, 2022
0
தமிழக காவல்துறையில் பணியின் போது உயிர் நீத்த 1132 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை
அடிப்படையில் பணி நியமனம் வழங்க மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்து, ஆணை வழங்கியதை தொடர்ந்து முதற்கட்டமாக 912
நபர்களுக்கு கருணை அடிப்படையில் காவல் துறையில் தகவல் பதிவு உதவியாளர், வரவேற்பாளர் ஆகிய பணிகளுக்கு பணி நியமன ஆணைகள்
வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேற்படி தகுதியான நபர்களில் இன்று 29.08.2022ம் தேதி ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 29 நபர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
Dr.V.சசிமோகன், இ.கா.ப., அவர்கள் ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் பணி நியமன ஆணைகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
Tags