Type Here to Get Search Results !

கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் பல லட்சம் முறைகேடு - எட்டாவது வார்டு நகர மன்ற உறுப்பினர் குமார சீனிவாஸ் புகார்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 28-வது வார்டில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடந்து வருகிறது. மாவட்டத்தில் மளிகை பொருட்கள் மலிவான விலையில் கிடைக்கும் இந்த சந்தையில் விற்பனைக்கு வரும் மளிகை பொருட்கள் காய்கறிகள் மற்றும் ஜவுளி போன்ற அனைத்து பொருட்களுக்கும் வியாபாரிகள் சுங்க கட்டணம் செலுத்தியே உள்ளே நுழைய முடியும். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சுங்க கட்டணம் வசூலிக்கும் உரிமத்திற்கான ஏலத்தில் கலந்து கொள்ள எவரும் முன்வராத காரணத்தினால், கோபி நகராட்சி நேரடியாக அதிகாரிகள் மூலம் சுங்க கட்டணத்தை வசூல் செய்து வந்தது. இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் 29.08.2022 இன்று சாதாரண கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட 8வது வார்டு நகர மன்ற உறுப்பினர் குமார சீனிவாஸ் அவர்கள் சில குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அதில் - கோபி நகராட்சி மொடச்சூர் வாரச்சந்தையில் சுங்க கட்டணம் வசூல் செய்யும் நகராட்சி அதிகாரிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக வாரம் 35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை வசூல் செய்துவிட்டு நகராட்சிக்கு 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை தொகை செலுத்தியுள்ளனர். இதனால் நகராட்சிக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். இது குறித்து கேள்வி எழுப்பியதற்கு ஆணையாளர் அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை என்றும், இதே போல் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு வரை பஸ் நிலைய பேருந்து கட்டணம் வசூல் செய்தல், கட்டணக் கழிப்பிடம் வசூல் செய்தல் போன்ற வசூல்களை நகராட்சி அதிகாரிகள் செய்து வந்தனர் என்றும், அதிலும் பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது எனவே அரசு இது குறித்து நடவடிக்கை எடுத்து வருவாய் இழப்பினை சரி செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், நகராட்சியின் மூலம் நேரடியாக வசூலாகும் பல லட்சம் வசூல் தொகையை அதிகாரிகள் முறைகேடாக கணக்கு காண்பித்து அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதை முறையான விசாரணை நடத்தி உண்மை நிலையை கண்டறிய வேண்டுமென தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.